← முகப்பு செய்திகள்

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் தி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் தி
பிரதமர் – ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி மாணவர் பரிமாற்றம், கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது.

செவ்னிங் புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம் போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால மக்கள் தொடர்புகளை வளர்ப்பதற்கும் கிடைக்கப்பெறுகின்ற பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.

முறையான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் உயர்கல்வித் துறையைப் பலப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது விளக்கிக்கூறினார்.

கல்வியின் தரத்தைப் பேணுதல் மற்றும் மாணவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்தல் பற்றிய ஐக்கிய இராச்சியத்தின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே கல்விசார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பொதுவான உடன்பாடுகளுடன் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net