எதிர்வரும் 27ஆம் திகதி அரச வெசாக் விழா ஆரம்பமாவதுடன், மே 30 வெசாக் பௌர்ணமி தினத்தில் அன்னதானம், உள்ளிட்ட மத வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். ஜூன் முதலாம் திகதி அரச வெசாக் விழா நிறைவு பெறும்.
இது தொடர்பபன ஏற்பாட்டுப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காகப் பிரதேச செயலகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பப்பட்டது.
அரச துறை, தனியார் துறை, முப்படைகள் மற்றும் பொலிஸ் உட்பட அனைவரையும் இணைத்துக்கொண்டு, இந்த வெசாக் உற்சவத்தை வெற்றிகரமாக நடத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி செயலாளர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
மாத்தறை மாவட்ட சாசனாரக்ஷக சபையின் மகா சங்கத்தினர், வலு சக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.