← முகப்பு தலையங்கம்

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்ற

🕐 06 Mar 2026 📂 தலையங்கம் 10 பார்வைகள்
ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்ற

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தூரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு கடலில் சிக்கியிருந்த தனது கடற்படையினரை மீட்டதற்காக இலங்கைக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி மூலம் பேசியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த உரையாடலின் போது, சர்வதேச கடல் நீரில் இருந்த ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அராக்சி கடுமையாக கண்டித்துள்ளதாகவும், இந்த சம்பவத்துக்காக சட்டரீதியான பொறுப்பை நிரூபிக்க ஈரான் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு கடலில் சிக்கியிருந்த கப்பலின் குழுவினரை மீட்க உதவியதற்காக இலங்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதேசமயம், எதிர்காலத்தில் ஈரானின் கப்பல்கள் மற்றும் கடற்படை பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தூரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு இலங்கை கடற்படை அவசர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு உயிர் தப்பியவர்களை மீட்டதுடன் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (News21)

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
தமிழகச் சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கி. சீனிவாசன் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா
50 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net