← முகப்பு தமிழ்

(இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 30 பார்வைகள்

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை இந்தாண்டு நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும். தேர்தல் பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த காரியாலயத்துக்கோ அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கோ கிடையாது.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்காக பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் தான் ரில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் இந்தாண்டு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் இந்தாண்டு நடைபெறாது என்று குறிப்பிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட போது ' தேர்தலை நடத்த நிதி இல்லை' என்று குறிப்பிட்டார்.அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஜே.வி.பி காரியாலயத்தின் தீர்மானத்துக்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது என்பது ரில்வின் சில்வாவின் கருத்து ஊடாக வெளிப்படுகிறது. இவரின் கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிப்போம் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net