← முகப்பு தலையங்கம்

அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்ப

🕐 12 Mar 2026 📂 தலையங்கம் 66 பார்வைகள்
அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்ப

அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தைச் சுற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தைச் சுற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஆவணங்களில் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

வேலை வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி பல இளம்பெண்களை சீரழித்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எப்ஸ்டீன் விவகாரம் உலகளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விவகாரத்தில் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் முன்பே இடம்பெற்றதால் ராஜகுடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் தற்போது வெளியான சமீபத்திய ஆவணங்கள் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. ஆண்ட்ரூ மற்றும் சாரா ஃபெர்குசனின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும், தங்கள் தாயுடன் அமெரிக்காவின் மியாமியில் எப்ஸ்டீனை சந்தித்ததாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் எப்ஸ்டீனை சந்தித்த காலத்தில், சிறுமியை சீரழித்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பிறகு அவர் வீட்டுச் சிறையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்கள் சந்தித்த நபர் குறித்து அறிந்திருந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்துகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், எப்ஸ்டீன் அனுப்பியதாக கூறப்படும் சிலரை இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து சென்று சுற்றிக் காட்டியதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு தற்போது எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சர்ச்சை மேலும் பெரிதாகலாம் என்பதால் அவர்கள் எதிர்காலத்தில் அதிக கவனத்துடன் நடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோதும், இளவரசிகள் தங்கள் பொது பணிகளை வழக்கம்போல் தொடர்வார்கள் என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது அவர்களுடைய பெயர்களும் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதால் கடந்த சில வாரங்களாக ராஜகுடும்பம் அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

The Telegraph பத்திரிகையின் ராஜகுடும்ப பிரிவு ஆசிரியர் ஹன்னா ஃபர்னஸ் கூறுகையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தற்போது அரண்மனையில் முன்பிருந்த ஆதரவு குறைந்திருப்பதை உணர்ந்திருக்கக்கூடும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net