← முகப்பு தலையங்கம்

அன்றைய தினம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். திடீரெனக் காட்டு மழை ஒன்று வந்தது.

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 2 பார்வைகள்
அன்றைய தினம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். திடீரெனக் காட்டு மழை ஒன்று வந்தது.
மழைக்கு கூடாரத்தில் ஒதுங்கிய 18 வயது மாணவன் சக மாணவனைக் குத்திக் கொன்ற கதை!

அன்றைய தினம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். திடீரெனக் காட்டு மழை ஒன்று வந்தது. இதனால் நடந்த சோகமான நிகழ்வைத்தான் இங்கே நாம் பதிவு செய்யவிருக்கிறோம். இப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்! அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள ஃபிரிஸ்கோ மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத விதமாகப் பேய்மழை கொட்டித் தீர்த்ததால், விளையாட்டு வீரர்கள் அனைவரும் நனையாமல் இருக்க மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை (Tents) நோக்கி அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அப்படி, மாற்றுப் பள்ளியைச் சேர்ந்த கார்மலோ ஆண்டனி (18) என்ற மாணவன், தங்குவதற்கு இடம் தேடி ஆஸ்டின் மெட்காஃப் என்ற சக மாணவனின் பள்ளி கூடாரத்திற்குள் நுழைந்தான். அந்த ஒரு நொடி நுழைவு, அங்கு ஒரு மரணப் போராக மாறும் என்று அங்கிருந்த யாருமே ஊகித்திருக்கவில்லை.

“இது எங்கள் பள்ளிக்கான கூடாரம், உடனே வெளியே போ!” என்று ஆஸ்டின் மெட்காஃப் மற்றும் அவனது சக வீரர்கள் கார்மலோவை மிரட்டி வெளியேற்ற முயன்றுள்ளனர். இதில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஒருகட்டத்தில் ஆஸ்டின் மெட்காஃப், கார்மலோவைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கார்மலோ, “என்னைத் தொட்டுப் பார், அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடியே, தனது விளையாட்டுப் பைக்குள் கைவிட்டு, மறைத்து வைத்திருந்த கூர்மையான மடிப்புப் கத்தியை (Folding Knife) மின்னல் வேகத்தில் வெளியில் எடுத்தான். சுற்றிலும் இருந்தவர்கள் தடுத்து நிறுத்த முற்படுவதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் ஆஸ்டின் மெட்காஃப்பின் நெஞ்சுப் பகுதியில் (Chest) அந்தக் கத்தியை ஆழமாகப் பாய்ச்சினான் கார்மலோ.

நெஞ்சில் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த 17 வயது இளம் விளையாட்டு வீரரான ஆஸ்டின் மெட்காஃப், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். ஒரு சாதாரணப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், அதுவும் சக மாணவர்களாலேயே ஒரு கொலை அரங்கேறியது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியது. கார்மலோ ஆண்டனி உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஓராண்டுகளாகத் தீவிரமாக நடந்து வந்த நிலையில், “நான் பயத்தின் காரணமாகத் தற்காப்பிற்காகவே (Self-Defense) கத்தியை எடுத்தேன்” என்று கார்மலோ வாதாடினான். ஆனால், “ஒரு பள்ளி விளையாட்டுப் போட்டிக்கு எதற்காகக் கத்தியை எடுத்து வர வேண்டும்? தற்காப்பு என்றால் ஏன் நெஞ்சில் குத்த வேண்டும்?” என்ற அரசுத் தரப்பின் அதிரடி கேள்விகளுக்கு முன்னால் கார்மலோவின் வாதம் தவிடுபொடியானது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று இந்த வழக்கில் நீதிமன்றம் தனது அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. நடுவர் மன்றம் கார்மலோவை முதல்நிலை கொலையாளி என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி அவனுக்கு 35 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். லண்டன் போன்ற நாடுகளில் கைதிகள் தங்களின் பாதி தண்டனைக் காலத்தைக் கழித்தாலே நன்னடத்தை விதிகளின் கீழ் வெளியே வர முடியும். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டப்படி, இந்த 35 ஆண்டுத் தண்டனையில் குறைந்தது 17ரை ஆண்டுகள் (17.5 Years) ஒரு நாள் கூடக் குறையாமல் கார்மலோ சிறைக்குள் கழிக்க வேண்டும்; அதன் பிறகே அவனுக்குப் பரோல் விண்ணப்பிக்கவே தகுதி கிடைக்கும். ஒரு சாதாரணக் குடைக்கீழ் ஒதுங்கிய இடத்தில் ஏற்பட்ட சிறு ஈகோ, இன்று ஒரு மாணவனின் உயிரைப் பறித்து, மற்றொரு மாணவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் 35 ஆண்டுகளுக்குச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது!

மேலும் செய்திகள்
தலையங்கம்
இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பி
11 Jun 2026
தலையங்கம்
ஜோதிடத்தின்படி, ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்கும் கிருத்திகை நட்சத்திரத்திற்கும் நகருகிறார்.
11 Jun 2026
தலையங்கம்
கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும்
11 Jun 2026
தலையங்கம்
தமிழ் சினிமாவின் முகவரியை மெட்ராஸ் ஸ்டுடியோக்களில் இருந்து தென்மாவட்டத்து மண் வாசனைக்கும், கிராமத்து மனிதர்களு
16 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையி
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஹாஜிகளின் நலனும் அவர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளும் மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையா
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net