← முகப்பு செய்திகள்

அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள்
டிக்கோயா இரட்டை கொலை ; தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை (21) வர்த்தக நிலைய குடியிருப்பில் இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், எஸ். காளிமுத்து சத்திவேல் (85) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net