← முகப்பு தமிழ்

அடுத்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 46 பார்வைகள்

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து மன்னர் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை மிகத் தீவிரமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மன்னார், சிலாபம், காலி, பொத்துவில், அம்பாந்தோட்டைஅவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பான நிலவரத்தைக் கொண்டிருக்கும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரைகடல் அலைகளின் உயரமானது 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் திடீரென மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதனால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net