← முகப்பு இன்றைய ராசிபலன்

Venus Transit In Gemini On 14 May 2026: சுக்கிரன் மே 14 ஆம்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 42 பார்வைகள்
Venus Transit In Gemini On 14 May 2026: சுக்கிரன் மே 14 ஆம்

Venus Transit In Gemini On 14 May 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். இதுவரை சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் இருந்தார்.

இந்நிலையில் சுக்கிரன் மே 14 ஆம் தேதி காலை 10.58 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த மிதுன ராசியில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கடக ராசிக்குள் நுழைவார். இப்படி புதனின் மிதுன ராசிக்குள் சுக்கிரன் செல்வதால், அந்த ராசியில் ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் சேர்ந்து குரு சுக்கிர சேர்க்கையால் சக்திவாய்ந்த கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.

சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அந்தஸ்து உயரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலதிபர்கள் கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். மேலும் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Venus Transit In Gemini On 14 May 2026 Effects On 12 Zodiac Signs

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிர்ன் செல்கிறார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அழுத்தம் குறையும். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும். பணிபுரிபவர்கள் இந்த பெயர்ச்சியால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் தேடி வரும்.

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இருந்தாலும், இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். எனவே பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவித நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் இலக்குகளை அடைவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

Venus Transit In Gemini On 14 May 2026 Effects On 12 Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், பணிபுரிபவர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் காலப்போக்கில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். காதலித்து வருபவர்களுக்கு தனது துணையிடம் மறைக்குமளவில் ரகசியங்கள் அதிகரிக்கும். நிதி ரீதியாக கலவையான பலன்கள் கிடைக்கும். எனவே புத்திசாலித்தனமாக செலவழிப்பதோடு, முதலீடுகளையும் ஒன்றிற்கு பலமுறை யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Venus Transit In Gemini On 14 May 2026 Effects On 12 Zodiac Signs

தனுசு

தனசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். சுக்கிரனின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். எனவே வரவு செலவை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டிகளில் எதிரிகளை தோற்கடித்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்களின் புதிய திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். அதோடு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

Venus Transit In Gemini On 14 May 2026 Effects On 12 Zodiac Signs

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளோ அல்லது தவறான புரில்களோ ஏற்படலாம். எனவே யாருடன் தொடர்பு கொள்ளும் போதும் தெளிவான தகவல் தொடர்பை பேணுங்கள். புதிய வீடு, வாகனம் அல்லது மதிப்புமிக்க பொருளை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net