← முகப்பு இன்றைய ராசிபலன்

Venus transit in Cancer on May 2026 give immense wealth and prosperity

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 38 பார்வைகள்
Venus transit in Cancer on May 2026 give immense wealth and prosperity

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நேர்மறையான கிரகங்களில் ஒருவராக அறியப்படுகிறார். சுக்கிரனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2026, மே 19 அன்று, காதல், அழகு, உறவுகள், ஆடம்பரம் மற்றும் நிதி ஆகியவற்றின் கிரகமான சுக்கிரன், உணர்திறன் மிக்க நீர் ராசியான கடக ராசிக்குள் நுழைகிறது.

ஜூன் 13 வரை சுக்கிரன் அதே ராசியில் நிலைத்திருக்கப் போகிறார். இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும் காலமாக இருக்கப்போகிறது. இந்த பதிவில் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசியின் லக்கினத்தில் சுக்கிரன் நுழைவதால் இது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கப்போகிறது. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் நிதி நிலையை உறுதி செய்ய முடியும். அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம். அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.

சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்கள் இப்போது அதற்கான வேலையைத் தொடங்கலாம், அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் சூலால் உருவாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த கிரக பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். அவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும், மேலும் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.

இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது மற்றும் வருமானம் அதிகரிக்கும். அவர்களின் சமூக உறவு வலுவடையும், மேலும் குறுகிய அல்லது நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அரசாங்க வேலைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இப்போது அதில் ஒருபடி முன்னேறுவார்கள். கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

Venus Transit in Cancer on May 2026 List of Four Lucky Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது வெற்றியை உறுதி செய்யும் காலமாக இருக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள். இதன் விளைவாக, உங்கள் சமூக மற்றும் குடும்ப சூழலில் மகிழ்ச்சியான சூழலை உணரலாம். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்வுகள் நடைபெறலாம். தொழில் சம்பந்தமாக இந்த நேரத்தில் நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கலாம், மேலும் உங்கள் தற்போதைய நிலை செழிப்பாக மாறும்.

சொந்த தொழில் செய்பவர்கள் இப்போது தங்கள் தொழிலை பிற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தலாம் அல்லது உங்கள் குடும்பத்தின் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். நிதிரீதியாக இந்த நேரம் செழிப்பாக இருக்கும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் சரியான முயற்சிகளால் வெற்றியை எளிதாக அடைய முடியும். மேலதிகாரிகளிடமிருந்து நேர்மறையான ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களின் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அவர்களின் கடந்த கால வேலைகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.

இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள், மேலும் பல்வேறு பணிகளை வெற்றிகரமாகச் செய்வதில் உற்சாகமாக இருப்பார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net