← முகப்பு இன்றைய ராசிபலன்

Venus Transit In Cancer On 08 June 2026: சுக்கிரன் ஜூன் 08 ஆம்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 20 பார்வைகள்
Venus Transit In Cancer On 08 June 2026: சுக்கிரன் ஜூன் 08 ஆம்

Venus Transit In Cancer On 08 June 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒவ்வொரு 26 நாட்களுக்கும் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியின் அதிபதி மனத்தின் காரணியான சந்திரன் ஆவார். இந்த கடக ராசியில் சுக்கிரன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருவார். இதனால் கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது கடக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Venus Transit In Cancer On 08 June 2026 List Of Lucky Zodiac Signs

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.

புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.

Venus Transit In Cancer On 08 June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Venus Transit In Cancer On 08 June 2026 List Of Lucky Zodiac Signs

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் இக்காலத்தில் எடுக்கும் சில முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தருவதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் வெற்றிகள் குவியும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் மிகவும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net