← முகப்பு இன்றைய ராசிபலன்

Saturn transit in Revathi nakshatra bring bad time to these 4 zodiac

🕐 08 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Saturn transit in Revathi nakshatra bring bad time to these 4 zodiac

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரும் அதேசமயம் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் கர்மவினை, ஒழுக்கம் மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகும். ஜூலை 2 அன்று, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் தனது நிலையை மாற்றி, அதன் இரண்டாவது பாதத்திற்குள் நுழையவுள்ளார். சனிபகவானின் இந்த கிரக மாற்றம் பல்வேறு ராசிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மற்ற கிரகங்களை விட சனிபகவான் மிகவும் மெதுவாக நகர்வதால், அதன் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட ஜோதிடத்தில் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றம் பெரும்பாலும் தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும். இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறக்கூடும் என்றாலும், சில ராசிக்காரர்கள் கடினமான காலங்களையும், சவால்களையும் தாமதங்களையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினருக்குப் பணியிடத்தில் புதிய சவால்களைக் கொண்டுவரக்கூடும். பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மன அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். மேலும், மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புள்ளது. அவர்களின் உடல்நலம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லையெனில் பெரிய தொகையை செலவழிக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் பிரபஞ்சம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் இப்போது சில பாதகமான விளைவுகளை சந்திக்கலாம், இது வியாபாரத்தில் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

சிம்மம்

ஜூலை 2-ஆம் தேதிக்குப் பிந்தைய காலகட்டம் சிம்ம ராசியினருக்குச் சற்று சவாலானதாக அமையலாம். முக்கியமான பணிகளில் ஏற்படும் தாமதங்கள், நிதி நெருக்கடிகள் மற்றும் குடும்பம் சார்ந்த கவலைகள் ஆகியவை உங்கள் பொறுமையைச் சோதிக்கக்கூடும். குடும்பத்தினரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மன அமைதியை மோசமாகப் பாதிக்கலாம். நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.

திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

https tamil boldsky com astrology venus-transit-in-cancer-on-june-08-list-of-4-lucky-zodiac-signs-072497 html

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பாராத செலவுகள் நிதிநிலையைச் சிரமப்படுத்தக்கூடும், இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போது சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

கும்பம்

சனிபகவானே கும்ப ராசியின் அதிபதியாக இருப்பதால் இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வலுவான தாக்கத்தை அனுபவிக்கக்கூடும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம், மேலும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

இந்த நேரத்தில், அவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்படலாம், எனவே அவர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், திருமணமாகாதவர்களுக்கு சரியான ஜோடி கிடைப்பது மிகவும் கடினமாக மாறலாம். மாணவர்கள் கல்வியில் சில போராட்டங்களை எதிர்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net