← முகப்பு இன்றைய ராசிபலன்

People born on these 3 months are born genius according to astrology:

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 35 பார்வைகள்
People born on these 3 months are born genius according to astrology:

புத்திக்கூர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான குணமாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான புத்திக்கூர்மை இருக்கும். சிலர் சிறந்த நியாபக சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், சிலர் பேசியே மற்றவர்களின் மனதை மாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் அனைத்து விதமான புத்திக்கூர்மையும், ஆற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் வீதிவிலக்கான நகைச்சுவை உணர்வும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மாதங்களில் பிறந்தவர்கள் நன்றாக படிப்பவர்களாகவும், நன்றாக முடிவெடுப்பார்களாகவும், சிக்கல்களை விரைவாகத் தீர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத்தரும். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள், இது அவர்களை வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய உதவுகிறது. அவர்கள் அனைத்து விஷயத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள், மேலும் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாகக் கருத்தில் கொள்கிறார்கள். அவர்கள் இயல்பிலேயே அனைத்து விஷயங்களையும் முன்னெச்சரிக்கையுடன் செய்பவர்களாக இருப்பார்கள். ஒரு திறமையான தலைமைக்குத் தேவையான சுய ஒழுக்கம், திட்டமிடலுக்கான வியூகத் திறன்கள் மற்றும் கூர்மையான சிந்திக்கும் திறன் ஆகியவற்றை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் அடையாளத்தை தங்களுடைய சுய முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் உருவாக்குகிறார்கள்.

People Born On These 3 Months Are Born Genius

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் விதிவிலக்கான புத்திக்கூர்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் புதுமையான சிந்தனைக்காக்க புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். இது அவர்களை எப்போதும் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி அவர்களை வழிநடத்துகிறது. தங்களின் வழக்கத்திற்கு மாறான யோசனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதில் அவர்கள் சிரமப்படலாம் என்றாலும், அவர்கள் மிகவும் முற்போக்கான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் சிந்தனைகள் எப்போதும் நிகழ்காலத்தை விட மிகவும் முன்னேறியதாக இருக்கும். அவர்களின் பகுத்தறிவும், முடிவெடுக்கும் திறனும் அவர்களின் புத்திக்கூர்மையின் முக்கிய அம்சங்களாகும். அவர்களின் புத்திக்கூர்மை வெறும் நினைவாற்றலைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் விதிவிலக்கான சிந்திக்கும் திறனையும் குறிக்கிறது.

செப்டெம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மையும், ராஜதந்திரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் செயல்களில் திட்டமிட்டுச் செயல்படப் பிறந்தவர்கள். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்கத் தவறும் விஷயங்களை அவர்கள் சரியாக கவனிப்பார்கள், மேலும் தங்களால் முடிந்தவரை அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்வார்கள். அவர்களின் கல்விசார் திறன்கள் மட்டுமின்றி, செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்களாகவும், நம்பகமானவர்களாகவும், திட்டமிட்டுச் செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அறிவின் பாரம்பரியத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள், தேர்வுகளில் நன்றாகச் செயல்படுவார்கள், கிட்டதட்ட அனைத்து விஷயங்களையும் நினைவில் கொள்வார்கள், மேலும் புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுக்கொள்வார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net