← முகப்பு செய்திகள்

PBKS vs MI: Jasprit Bumrah steps up as MI's new captain for

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 42 பார்வைகள்
PBKS vs MI: Jasprit Bumrah steps up as MI's new captain for

தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பேற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் 2026 ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் நிகழ்வின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா வந்ததை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். டாஸ் வென்ற பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்பின் அவர் பேசுகையில், குளிர்ந்த வானிலை காரணமாக முதலில் பந்துவீச முடிவெடுத்தோம். மும்பை அணியின் கேப்டனாவதற்கு முன்பே நான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. சூர்யகுமார் யாதவ் சொந்த காரணங்களுக்காக இன்று விளையாடவில்லை. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற சில அணிகளுக்கு நெருக்கடி கொடுப்போம் என சிரித்தபடியே தெரிவித்தார்.

PBKS vs MI Jasprit Bumrah Leads Mumbai Indians as Captain Opts to Bowl Against Punjab in Dharamshala

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருப்பதாக அணி நிர்வாகம் கூறி இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீசவே முடிவு செய்திருந்தோம். ஆடுகளம் சற்று வறண்டு காணப்படுகிறது. கடந்த போட்டிகளில் நடந்த தவறுகளை மறந்துவிட்டு, முழுமையான பாசிட்டிவ் மனநிலையுடன் இந்த போட்டியை எதிர்கொள்வோம் என்றார். இந்தப் போட்டிக்கான பஞ்சாப் அணியில் ஹர்பிரீத் பிரார், சேவியர் பார்ட்லெட் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆடுகளத்தின் தன்மை குறித்து வர்ணனையாளர்கள் கூறுகையில், கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் அமைந்துள்ள தரம்சாலா மைதானம் உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றாகும். மைதானத்தின் ஒருபுறம் பவுண்டரி எல்லை 63 மீட்டராகவும், மற்ற பகுதிகளில் 68 மற்றும் 72 மீட்டராகவும் உள்ளது. கடந்த போட்டியை போலவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கே ஆடுகளம் முழுமையாக கைகொடுக்கும் என தெரிகிறது.

ஆடுகளத்தில் உள்ள கருமையான பகுதிகளில் பந்து குத்தி சற்று மெதுவாகவும், வெண்மையான பகுதிகளில் பந்து வேகமாக பேட்டிற்கும் வரும். இதனால் இரு விதமான பவுன்ஸ்களை பேட்ஸ்மேன்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும், கடல் மட்டத்திற்கு மேலே அதிக உயரத்தில் இருப்பதால் பந்து காற்றில் மிக வேகமாக பயணிக்கும். எனவே பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களை கவனமாக எதிர்கொண்டால், இங்கு 200 ரன்கள் என்பது மிக எளிதான இலக்காக இருக்கும் என கணித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11: ரையன் ரி கெல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ராஜ் பாவா, கார்பின் போஷ், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரகு சர்மா

மும்பை இந்தியன்ஸ் மாற்று வீரர்கள்: ரோஹித் சர்மா, மயங்க் ராவத், ராபின் மின்ஸ், கிரிஷ் பகத், ட்ரெண்ட் போல்ட்

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் 11: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கூப்பர் கான்லி, ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷெட்ஜ், அஸ்மத்துல்லா ஒமர்சாய், மார்கோ யான்சென், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்

பஞ்சாப் கிங்ஸ் மாற்று வீரர்கள்: விஜய்குமார் வைஷாக், ஹர்பிரீத் ப்ரார், மிட்செல் ஓவன், விஷ்ணு வினோத், பிரவின் துபே

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav axing from captaincy is tough decision taken for Team Future
06 Jun 2026
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
20 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
46 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net