ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். செவ்வாய் தற்போது மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளது, இந்த கிரக பெயர்ச்சியானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் கிரகப் பெயர்ச்சியானது மே 11-ஆம் தேதி மதியம் 12:38 மணிக்கு நிகழ்ந்தது, செவ்வாய் ஜூன் 21 வரை மேஷ ராசியிலேயே நிலைபெற்று, அதன் பிறகு சுக்கிரனால் ஆளப்படும் சுக்கிர ராசிக்குள் நுழையும்.
ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் ஆற்றல், துணிச்சல் மற்றும் வலிமை ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலிமையுடன் அமைந்திருந்தால், அது அவர்களை அச்சமற்றவராகவும், மிகுந்த வல்லமை கொண்டவராகவும் மாற்றும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதே கிரகம் பலவீனமாகவோ அல்லது சாதகமற்ற நிலையில் அமைந்திருந்தாலோ, அது அவர்களை பலவீனமானவர்களாக அல்லது ஆரோக்கியமற்ற நடத்தைகளை நோக்கித் தள்ளக்கூடும். இந்த பதிவில் செவ்வாயின் பெயர்ச்சியால் ஆதாயமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
செவ்வாய் கிரகம் மேஷ ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்கிறது. இந்த கிரக மாற்றத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு இப்போது தீர்வு காண முடியும். சனிபகவான் ஆசியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும், மேலும் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். வேலை மற்றும் வணிகத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும்.
மேஷ ராசிக்காரர்கள் எளிய தீர்வுகள் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியும், மேலும் மற்றவர்களை தங்கள் பேச்சால் கவர முடியும். நண்பர்களின் உதவியால் அவர்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம் மற்றும் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ரிஷபம்
செவ்வாய் ரிஷப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் பிரவேசித்துள்ளது. இந்த இடமானது செலவுகள் மற்றும் ஆடம்பரத்துடன் தொடர்புடையதாகும். இந்த கிரக பெயர்ச்சியால் ஜூன் 20-ஆம் தேதி வரை, அவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம்பரப் பொருட்கள் அல்லது தனிப்பட்ட இன்பங்களுக்காக அவர்கள் சற்று அதிகமாகச் செலவிடலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள்.
செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. செவ்வாயின் பெயர்ச்சி உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் செவ்வாய் பிரவேசிக்கப் போகிறது. இந்த இடமானது சொத்து, வாகனங்கள், வீடு மற்றும் தாய் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கிரக பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்கள் அவர்களின் துறைகளில் பெரிய வெற்றிகளை பெறப்போகிறார்கள். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடிவரலாம், மேலும் உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படலாம்.
இந்த காலகட்டத்தில் அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கலாம், வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் வருமானம் ஈட்டலாம். அதைத் தவிர, அவர்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். நிதி நிலைமை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும். அவர்கள் வருமானத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.