← முகப்பு செய்திகள்

KKR vs DC: In a must-win encounter for their playoff survival, Kolkata

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
KKR vs DC: In a must-win encounter for their playoff survival, Kolkata

கொல்கத்தா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரகானே, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கொல்கத்தா அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகும். புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதுடன், மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவையும் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் உள்ளது.

KKR vs DC IPL 2026 Do-or-Die Battle for Kolkata KKR Wins Toss and Opts to Bowl

குறிப்பாக, ரன் ரேட் அடிப்படையில் முன்னேற டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கும் இலக்கை மிக விரைவாக எட்ட வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா உள்ளது. உதாரணமாக, டெல்லி அணி 180 ரன்கள் எடுத்தால், கொல்கத்தா அதனை 12 முதல் 12.4 ஓவர்களுக்குள் கடக்க வேண்டும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும், கடைசி போட்டியில் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களம் இறங்குகிறது. அந்த அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் நபி ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் எல்லைகள் சிறியதாக இருப்பதால், ரன் மழை பொழியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜின்க்யா ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி, ஈடன் கார்டன் ரசிகர்களின் ஆதரவுடன் தங்களது பிளே-ஆப் கனவை நனவாக்க போராடும்.

IPL 2026: அத்துமீறிய ரசிகர்கள்.. அலறிய சியர் லீடர்கள்.. ஓடி வந்த காவலர்கள்.. என்ன நடந்தது?

டெல்லி கேபிடல்ஸ் அணி: அபிஷேக் போரல், கே.எல். ராகுல், சாஹில் பராக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, மாதவ் திவாரி, ஆகிப் நபி, மிட்செல் ஸ்டார்க், லுங்கி என்கிடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: அஜின்க்யா ரகானே, தேஜஸ்வி தஹியா, கேமரூன் கிரீன், ரோவ்மன் பவல், மனிஷ் பாண்டே, ரிங்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி, சௌரப் துபே, கார்த்திக் தியாகி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ஃபின் ஆலன், சர்தக் ரஞ்சன், வைபவ் அரோரா, ரமன்தீப் சிங், ராகுல் திரிபாதி

டெல்லி கேப்பிட்டல்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: திரிபுரானா விஜய், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், நிதிஷ் ராணா, குல்தீப் யாதவ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net