← முகப்பு இன்றைய ராசிபலன்

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026: சிம்ம ராசியில் கேது

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 30 பார்வைகள்
Ketu Moon Conjunction In Leo On 22 May 2026: சிம்ம ராசியில் கேது

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் நவகிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் கடக ராசியின் அதிபதியாவார். இப்படி குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு நல்ல முன்னேற்றத்தைத் தந்தாலும், சிலருக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கும். அந்த வகையில் சந்திரன் மே 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார்.

இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தினால் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது சந்திர சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026 List Of Unlucky Zodiac Signs

மீனம்

கேது சந்திர சேர்க்கையால் மீன ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம், உடல் சோர்வால் அவதிப்பட நேரிடும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026 List Of Unlucky Zodiac Signs

சிம்மம்

கேது சந்திர சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரித்தாலும், அவசர முடிவுகள் இழப்புக்களையும், பிரச்சனைகளையும் உண்டாக்கும். பயணங்களை மேற்கொள்ளும் போது கவனம் அவசியம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் தம்பதிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026 List Of Unlucky Zodiac Signs

மகரம்

கேது சந்திர சேர்க்கையால் மகர ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திப்பார்கள். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் வருத்தப்படலாம். நண்பர்கள் அல்லது சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றலாம். யாருடனும் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருந்தால் கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி காண முடியும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

Ketu Moon Conjunction In Leo On 22 May 2026 List Of Unlucky Zodiac Signs

விருச்சிகம்

கேது சந்திர சேர்க்கையால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். எதிரிகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். சட்ட பிரச்சனைகளில் சிக்கி அவதிப்படக்கூடும். ஆரோக்கிய பிரச்சனைகள் பலவீனப்படுத்தும். செரிமான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எனவே உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இதய பிரச்சனைகளை கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net