← முகப்பு இன்றைய ராசிபலன்

Kaalsarp Yog On 11 May 2026: மே 11 ஆம் தேதி கால சர்ப்ப

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 30 பார்வைகள்
Kaalsarp Yog On 11 May 2026: மே 11 ஆம் தேதி கால சர்ப்ப

Kaalsarp Yog On 11 May 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள், சேர்க்கைகள் போன்றவற்றால் பல்வேறு சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகலாம். அதில் ஒன்று தான் காலசர்ப்ப யோகம். இந்த யோகம் மிகவும் முக்கியமான மற்றும் செல்வாக்கும்க்க யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகமானது நிழல் கிரகங்களால் ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அனைத்து கிரகங்களும் வரும் போது உருவாகும்.

அந்த வகையில் மே 11 ஆம் தேதி கால சர்ப்ப யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது சிம்ம ராசியில் உள்ள கேதுவிற்கும், கும்ப ராசியில் உள்ள ராகுவிற்கும் இடையில் அனைத்து கிரகங்களும் ஒன்று சேர்ந்திருக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கலாம். இப்போது ராகு கேதுவால் உருவாகும் காலசர்ப்ப யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Kaalsarp Yog On 11 May 2026 These Zodiac Signs Should Be Careful

ரிஷபம்

கால சர்ப்ப யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே எந்த ஒரு வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த வேலைகள் திட்டமிட்ட படி நடக்காமல் போகலாம். இதனால் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பொறுமை மிகவும் அவசியம். முக்கியமாக மே 26 ஆம் தேதி வரை பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Kaalsarp Yog On 11 May 2026 These Zodiac Signs Should Be Careful

கடகம்

காலசர்ப்ப யோகத்தால் கடக ராசிக்காரர்கள் மனதளவில் பல சவால்களை சந்திப்பார்கள். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் மற்றும் தேவையற்ற பயமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Kaalsarp Yog On 11 May 2026 These Zodiac Signs Should Be Careful

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கால சர்ப்ப யோகத்தால் குடும்ப விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு தவறான முடிவும் சிக்கலுக்கு வழிவகுக்கும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலைமை பாதிக்கப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

Kaalsarp Yog On 11 May 2026 These Zodiac Signs Should Be Careful

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் காலசர்ப்ப யோகத்தால் நிதி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு அலட்சியங்கள் கூட பெரிய இழப்புக்களை உண்டாக்கும். திட்டமிட்ட வேலைகள் சரியாக நடக்காமல் போகலாம். வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பொறுமை இக்காலத்தில் மிகவும் அவசியம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

காலசர்ப்ப யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க..

ராகு கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகத்தின் தீய விளைவுகளை தவிர்க்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

* கால சர்ப்ப யோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
* சிவபெருமானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
* நீல நிற ஆடைகள் மற்றும் கருப்பு எள்ளை தானம் செய்வது நல்லது.
* ஒரு ஜோடி உலோகப் பாம்புகளை நீரில் மூழ்கடிப்பதும் இந்த யோகத்தின் தீய விளைவுகளைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net