← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026: அசுரர்களின் குருவாக கருதப்படும்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 38 பார்வைகள்
Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026: அசுரர்களின் குருவாக கருதப்படும்

Jupiter Venus Conjunction 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் இந்த மிதுன ராசியில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையானது மிகவும் மங்களகரமானது.

நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த குருவும், சுக்கிரனும் ஒன்றிணையும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த சேர்க்கையானது ஜூன் 08 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த குரு-சுக்கிர சேர்க்கையினால் 6 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மே 14 முதல் வாழ்க்கையில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும், தடைபட்ட வேலைகள் வேகமாக முடிவடையும். குரு பகவானின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதிதாக ஏதாவது கற்று கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் ஆற்றலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வமும் சொத்துக்களும் பெருகும்.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகலாம். மேலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை விரிவாக்கும் உங்களின் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். குரு பகவானின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், வாழ்வில் வெற்றியும், செல்வமும், சந்தோஷமும் பெருகும்.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றமும் செழிப்பும் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். வேலையிலும் தொழிலிலும் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஜூன் 08 வரை சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகத்தில் அல்லது வேலையில் உங்கள் போட்டியாளர்களை விட நீங்கள் ஒரு படி மேலே இருப்பீர்கள். பரம்பரை சொத்துக்களால் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவுமுறையை மேம்படுத்துவது நல்லது.

Jupiter Venus Conjunction In Gemini On 14 May 2026 List Of Lucky Zodiac Signs

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வெற்றிகள் குவியும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழில் என இரண்டிலும் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net