← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Transit In Punarpoosam Nakshatra On 14 May 2026: குரு பகவான் மே

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 20 பார்வைகள்
Jupiter Transit In Punarpoosam Nakshatra On 14 May 2026: குரு பகவான் மே

Jupiter Transit In Punarpoosam Nakshatra On 14 May 2026: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் காரணியாகக் கருதப்படுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட குரு பகவான் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் குரு பகவான் மே 14 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இங்கு ஜூன் 02 ஆம் தேதி வரை இருப்பார்.

குரு பகவானின் இந்த நட்சத்திர நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த குரு பகவானின் நிலை மாற்றத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் வரை அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

Jupiter Transit In Punarpoosam Nakshatra On 14 May 2026 Lucky Zodiac Signs

துலாம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல்நலம் மேம்படும். குரு பகவானின் ஆசியால் வாழ்க்கையில் வாழ்க்கையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளன. குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வலுவடையும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

Jupiter Transit In Punarpoosam Nakshatra On 14 May 2026 Lucky Zodiac Signs

மீனம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net