← முகப்பு செய்திகள்

Iran: “100 மில்லியன் பேரல் எண்ணெய் ஹார்முஸைத் தாண்டியது” – ட்ரம்ப்-ன் ‘ரகசிய ஆபரேஷன்’; பின்னணி என்ன?

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
Iran: “100 மில்லியன் பேரல் எண்ணெய் ஹார்முஸைத் தாண்டியது” – ட்ரம்ப்-ன் ‘ரகசிய ஆபரேஷன்’; பின்னணி என்ன?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி அதிகம் பேசப்பட்ட விஷயம் ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி’.

போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. அது உலகின் எண்ணெய் போக்குவரத்திற்குப் பேரிடியாக இருந்தது.

எந்தக் கப்பல்களும் அந்த நீர்ச்சந்தி வழியாகச் சென்று வரமுடியவில்லை. அவ்வப்போது சில கப்பல்கள் மட்டும் அந்த வழியே வந்து போய்கொண்டிருந்தாலும், உலக நாடுகளின் எண்ணெய் வர்த்தகத் தேவைகளுக்கு அந்த எண்ணெய் பத்தாது.

ட்ரம்ப் பதிவு

Iran: போர் நிறுத்தத்தை மீறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா, ஈரான்; என்ன தான் சொல்கிறார்கள்?

இந்த நிலையில், தான் ஒரு ரகசிய ஆபரேஷனை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்…

“கடந்த மாதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பெருமைமிகு அமெரிக்க ராணுவத்திற்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.

அந்த முயற்சியின் பலனாக, இன்று 100 மில்லியனுக்கும் அதிகமான பேரல் எண்ணெய் அந்த நீர்ச்சந்தியைக் கடந்து, பாதுகாப்பாக உலகச் சந்தையைச் சென்றடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

200-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் இந்த நீர்ச்சந்தி வழியாகப் பாதுகாப்பாகப் பயணம் செய்துள்ளன.

இந்தப் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான்… ஈரானின் கட்டுப்பாட்டில் அல்ல.

ஈரானின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது, அவர்களின் பொருளாதாரமும் சீரழிந்துவிட்டது. ஈரானின் கதை முடிந்தது!”

Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net