லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆல்-ரவுண்டர் கஸ் அட்கின்சன் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற பிறகு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியின் விதியை மீறி நள்ளிரவில் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு நடந்த மோதலில் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதால், ஓவல் மைதானத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது.

ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து ரூட் விலகி இருந்தார். அதன் பிறகு, தற்போது மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஹாரி புரூக் இருந்தாலும், கடந்த ஆண்டு நியூசிலாந்தில் அவரும் இதே போன்ற நைட் கிளப் சர்ச்சையில் சிக்கியதால், இம்முறை அனுபவ வீரரான ரூட்டிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அணியில் நீக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோர்டான் காக்ஸ் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை அறிமுக வாய்ப்பை தவறவிட்ட ஜோர்டான் காக்ஸ், இந்த ஓவல் டெஸ்டில் அறிமுக வீரராக களம் காண உள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியதால் முதல் டெஸ்டில் ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை. தற்போது அட்கின்சன் இல்லாததால் ஆர்ச்சருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
“ரோஹித் சர்மா கொடுத்த டிப்ஸை இந்திய அணிக்கு எதிராகவே பயன்படுத்துவேன்” – ஆப்கன் ஸ்பின்னர் கசான்பர்
இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், சன்னி பேக்கர், சோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரீவ், ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.