← முகப்பு செய்திகள்

Iran: “அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது” – ஈரான் என்ன சொல்கிறது?

🕐 04 May 2026 📂 செய்திகள் 90 பார்வைகள்
Iran: “அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது” – ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது.

இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது.

அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் கலந்துகொள்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறதா என்பதே இன்னும் தெரியவில்லை.

ஈரான் தரப்பில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.

காலிபாஃப் பதிவு

Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை – ‘குட்டி’ Summary

காலிபாஃப் பதிவு

இந்த நிலையில், முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில், “முற்றுகையிடுவது மூலமும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது மூலமும், பேச்சுவார்த்தை மேசையை ட்ரம்ப் தனது கற்பனையில் சரணடைவதற்கான மேசையாகவும், போரைத் தூண்டுவதை நியாயப்படுத்தவும் முயல்கிறார்.

அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரத்தில், போர்க்களத்தில் எங்களது புதிய வியூகங்களை வெளிப்படுத்த நாங்கள் தயாராகியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு ‘சூப்பர்’ வழி! | பணம் வளர்ப்போம்

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
26 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
42 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
52 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
58 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net