இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா மீது இஸ்ரேலிய படைகள் கடந்த நேற்று (03) நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
காஸாவில், போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 936 பேர் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.