← முகப்பு செய்திகள்

IPL 2026: Virat Kohli's Historic Century Seals Clinical Victory for RCB Against

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
IPL 2026: Virat Kohli's Historic Century Seals Clinical Victory for RCB Against

ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி சதம் விளாசி புதிய சரித்திரம் படைத்துள்ளார். அவரது அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அங்கிரிஷ் ரகுவன்ஷி 71 ரன்களும், அதிரடி மன்னன் ரிங்கு சிங் 49 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர் விராட் கோலி இடியாய் இறங்கினார். ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர் 60 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு துணையாக ஆடிய தேவ்தத் படிக்கல் 39 ரன்கள் சேர்த்தார். முடிவில் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

IPL 2026 Virat Kohli s Historic Century Seals Clinical Victory for RCB Against KKR in Raipur Thriller

இந்த மிரட்டலான சதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 9வது சதத்தையும், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தையும் பதிவு செய்து விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும், டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 14000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டினார்.

இந்தப் போட்டியில் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இது விராட் கோலி வெல்லும் 21வது ஐபிஎல் ஆட்டநாயகன் விருது ஆகும். இதன் மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் கோலி. அவரது இந்த வரலாற்றுச் சாதனையால் பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 2026 புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net