தர்மசாலா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பிறகு, இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி சனிக்கிழமை (ஜூன் 13) தர்மசாலாவில் உள்ள எழில் கொஞ்சும் இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 2023-க்குப் பிறகு இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.
உலகின் மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக விளங்கும் இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த மூன்று ஒருநாள் தொடர்களில் இரண்டை இழந்த பிறகு, இந்த வடிவத்தில் தங்களது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வெற்றிகள் முக்கிய தேவையாக மாறி உள்ளன. உலகக் கோப்பை இன்னும் காலம் உள்ள நிலையில், பணிச்சுமையை நிர்வகிக்கவும், புதிய வீரர்களைப் சோதிக்கவும் ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தொடர் இளமையும் அனுபவமும் கலந்த ஒரு நல்ல சமநிலையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷ் துபே போன்ற இளம் வீரர்கள் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், அணிக்கு கூடுதல் பவரையும், போட்டித்தன்மையையும் கொண்டு வருவார்கள். இந்தியாவின் பேட்டிங் வரிசை பெரும்பாலும் நிலையானதாக இருந்தாலும், விராட் கோலி இல்லாத நிலையில், குறிப்பாக மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கான மாற்று இடங்களுக்கான வாய்ப்புகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கேன் வில்லியம்சன் மறக்க முடியாத டாப் 5 இன்னிங்ஸ்.. கிரிக்கெட்டின் ஜென்டில்மேனின் சாதனைகள்
ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி எளிதில் வீழ்த்தக்கூடிய அணி அல்ல, அவர்கள் ஒரு வலுவான எதிரியாக விளங்குவார்கள். அவர்கள் கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில்தான் தோல்வியடைந்தனர். அதன்பிறகு அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் மீண்டும் வங்கதேசத்திற்கு எதிரான தொடர்களில் அடுத்தடுத்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, போட்டி நடைபெறும் நாளில் தர்மசாலாவில் தெளிவான வானிலை இருக்காது என்றே தெரிகிறது. ஜூன் 13, சனிக்கிழமைக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 51% ஆகவும் இருக்கும். அத்துடன் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை முற்றிலும் பாதிக்காது என்றாலும், பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டியில் ரசிகர்களையும் மைதானப் பணியாளர்களையும் நாள் முழுவதும் சிக்கலை தரலாம்.
வார இறுதியில் இப்பகுதியில் சுமார் 12 மிமீ வரையிலான மிதமான மழையும், லேசான காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. AccuWeather.com இன் படி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பகுதியின் 90% இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்குப் பிறகு மேகமூட்டம் குறைந்து வானிலை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
மிக மோசமான சூழ்நிலையிலும் கூட, அதிக ஓவர்கள் வீணாகாது என்பதால், ஆட்டத்தின் முடிவைக் காண்பதில் ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கலாம்.வரலாற்று ரீதியாக, ஜூன் மாதத்தில் தர்மசாலாவில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 42% ஆக உள்ளது. அப்படி மழை பெய்யும்போது வழக்கமாக 16 மிமீ மழைப்பொழிவு பதிவாகிறது. இதனால், டாஸ் போடப்படும் தருணத்தில் இருந்தே இரு அணிகளின் கேப்டன்களும், போட்டி நடுவர்களும் வானிலை மீது ஒரு கண்வைத்திருக்க வேண்டியது வரும்.