← முகப்பு செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேம் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித

🕐 12 Jun 2026 📂 செய்திகள் 2 பார்வைகள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேம் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித
கிரிக்கெட் வீரர் கேம் வில்லியம்சன் ஓய்வு

கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்காக 378 போட்டிகளில் விளையாடி, எண்ணற்ற பேட்டிங் சாதனைகளைப் படைத்ததுடன், கிரிக்கெட் உலகின் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவராகவும் திகழ்ந்தார். 35 வயதான இவர், 48 சதங்கள் மற்றும் ஆறு இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்துள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2021-ஆம் ஆண்டின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) கோப்பையை நியூசிலாந்து அணி வெல்ல இவரது கேப்டன் ஷிப் பெரும் பங்காற்றியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேன் வில்லியம்சன் உள்ளார்.

தனது ஓய்வு குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது: இது குறித்து நான் சிறிது காலமாகவே யோசித்து வந்தேன். ஆனால், இப்போதுதான் அதற்கான சரியான தருணம் வந்துள்ளது.இது நான் மிகவும் நேசிக்கும் ஒரு அணி. இவ்வளவு நீண்ட காலம் இதன் ஒரு பகுதியாக இருந்ததை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இது எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாகவே இருக்கும்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net