← முகப்பு செய்திகள்

CSK Pacer Jamie Overton Ruled Out of IPL 2026 Due to Severe

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 94 பார்வைகள்
CSK Pacer Jamie Overton Ruled Out of IPL 2026 Due to Severe

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது மிகப்பெரிய மரண அடி விழுந்துள்ளது. ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு மிக முக்கிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், திடீர் காயம் காரணமாக தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார். கோப்பையை வெல்லும் கனவில் இருந்த சிஎஸ்கே அணிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை. லீக் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டிய சவால் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. இதில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றை நினைத்தே பார்க்க முடியும். மூன்று போட்டிகளிலும் வென்றால் உறுதியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

CSK Pacer Jamie Overton Ruled Out of IPL 2026 Due to Severe Injury Playoff Hopes Dented

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார்.

சில நாட்களுக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆட்டத்தின் திருப்புமுனையாக அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதாலேயே சிஎஸ்கே அணி அந்தப் போட்டியில் த்ரில்லர் வெற்றி பெற்றது.

தற்போது ஜேமி ஓவர்டனுக்கு லண்டனில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளதால், அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீசன் முழுவதுமே சிஎஸ்கே அணிக்கு காயம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கனவே முன்னணி வீரர்களான கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

IPL 2026: தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த விராட் கோலி… ஐபிஎல் வரலாற்றில் யாருமே தொடாத புதிய உச்சம்

இதற்கு நடுவில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த இருந்த ஜேமி ஓவர்டனும் தற்போது விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தொடர் காயங்களால் நிலைகுலைந்துள்ள சிஎஸ்கே அணி, இந்த பெரும் தடையை தாண்டி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net