← முகப்பு செய்திகள்

6 மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘சிலந்தி-2’

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
6 மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘சிலந்தி-2’

கேரளாவில் இருந்து வந்த நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், மலையாளம் தாண்டி தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘நிஜமா, நிழலா’, ‘பேய் மாமா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ம் ஆண்டில் ஆதிராஜன் இயக்கத்தில் ‘அருவா சண்ட’ படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் ஆதிராஜன் இயக்கத்தில் ‘சிலந்தி-2’ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 2008-ம் ஆண்டில் இயக்கிய ‘சிலந்தி’ படத்தின் 2-ம் பாகமாக ‘சிலந்தி-2’ படத்தை ஆதிராஜன் இயக்கவுள்ளார். ஆதிராஜன் கூறும்போது, “இது எனது 5-வது படம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் மிரட்டல் திரில்லர் படமாக உருவாகிறது. மாளவிகா மேனன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி நடிகர் – நடிகைகள் இணையவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் நாடுகளில் நடைபெற உள்ளது. ‘லோகா’, ‘காந்தாரா’ போன்று இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம்பெறுகிறது”, என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net