← முகப்பு செய்திகள்

2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 2 பார்வைகள்
2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான விவாதங்கள் தற்போது துவங்கிவிட்டது. அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வலுத்து வருகிறது. 2027-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணிகளின் எண்ணிக்கை 12 ஆகவும், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இந்தியாவில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களை கோடை வெப்பத்தால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக கோடை காலத்துக்கு முன்பாகவே ஐபிஎல் போட்டிக்களை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பிசிசிஐ, இந்நிலையில், கோடை வெப்பத்திலிருந்து வீரர்களையும் ரசிகர்களையும் பாதுகாக்கும் வகையில், 2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை முன்னதாக, இரு வாரங்களுக்கு முன் அதாவது மார்ச் 10 அல்லது 15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் நாளை தனித்தீர்மானம் கொண்டு
18 Jun 2026
செய்திகள்
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை நாளை முழுவதுமாக திறக்கப்பட உள்ளது. மே
18 Jun 2026
செய்திகள்
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக,டில்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு திடுக்
18 Jun 2026
செய்திகள்
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to stop comparing 15-year-old
18 Jun 2026
செய்திகள்
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி தன் மகனான மிதுனை அரசியல்
18 Jun 2026
செய்திகள்
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்
18 Jun 2026
முக்கிய செய்திகள்
1
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அந்த நிலைமையைத
தமிழ் · 18 Jun 2026
2
ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்ந
3
காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
4
UK, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து UAE இந்த நடவடிக்கையை
5
ஹொரண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேற்கத்திய மற்றும் ஆயு
6
(செ.கவிஷனா)இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை
தமிழ் · 18 Jun 2026
7
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net