தரகர் மிலிந்த சமரச பேச்சில்?

by admin

ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று (04) பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.

கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என உறுதியாக அறிவித்ததன் பின்னர் அவருக்கு ஆதரவு வழங்க அதிகளவிலான ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உத்தர லங்கா சபாகய, சுதந்தர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் சிலர் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாலும் அவர்கள் கலந்துக்கொண்டிருக்கவில்லை, காரணம் ரணில் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என இன்னும் உறுதிபடுத்தாமையே என குறித்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்