இந்தியா வெங்காயத்திற்கான சிக்கல் நீடிக்கின்றது

by admin

இலங்கையில் பெரிய வெங்காயத்திற்கான தட்டுப்பாடு தொடர்கின்றது.இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடுத்துள்ள நிலையில் இலங்கை சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முற்பட்டுள்ளது.

அதனை தடுக்க இந்தியா மீண்டும்  இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதியை அனுமதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலை பிரச்சினை காரணமாக சிக்கல் நிலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்