கனடாவிற்காக காத்திருக்கும் இந்தியா?

by admin

கனடாவில் கைது செய்யப்பட்ட இந்திய உளவாளிகள் தொடர்பில் இந்திய அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் காத்திருப்பதாக சப்பை கட்டு கட்ட தொடங்கியுள்ளது.

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியர்கள் மூவர் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி, வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில்,  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைச் சம்பவத்தில், கரன் பிரார் (வயது 22), கமல்ப்ரீத் சிங் (வயது 22) கரன்ப்ரீத் சிங் (வயது 28) ஆகிய மூன்று இந்தியர்களே இவ்வாறு கனடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவிலுள்ள ஒரு சிலருடன் தொடர்பில் இருப்பது போல் தெரிய வருவதாகவும், பஞ்சாபிலிருந்து திட்டமிட்டு கனடாவில் சில குற்ற சம்பவங்கள் நடந்து வருவது கவலையளிப்பதாகவம் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய விபரங்களை கனடா பொலிஸார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்