19 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் படபொல – படதூவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக, தடிகளால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவ்வித நியாயமான சந்தேகங்களுக்கும் இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிகள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.