ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்த விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன செவ்வாய்க்கிழமை (12) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையானார். இதன்போது, ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவரிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியிருந்தார். குறித்த எயார் பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.