தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.