← முகப்பு செய்திகள்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்
பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net