இலங்கைக்கும் பெலாறூஸூக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 12 – 15 வரை பெலாறூஸூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இருநாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்து விமான சேவைகள், உயர்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகயை உள்ளடக்கியவாறு குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய இலங்கை – பெலாறூஸ் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளுக்கிடையிலான ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்பன கையெழுத்திடப்படவுள்ளன.