← முகப்பு செய்திகள்

விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல்
கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில், கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​த ரூ.500 வரை பணம் வசூலித்​து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கர்ப்​பிணி பெண்​கள், புதுமண தம்​ப​தி​கள், மாநில ஆளுநர்​கள், முதல்​வர்​கள், மடா​திப​தி​கள், ஜீயர்​களை இலவச சிறப்பு தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கலாம்.

பணத்​தின் அடிப்​படை​யில் பாரபட்​சம் காட்​டும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்​கும்​படி இந்து சமய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட மனு​வில் கோரி​யுள்​ளார்.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்சுமி நாராயணன், மனுவுக்கு பதிலளிக்​கும்​படி தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை மே 29-ம் தேதிக்​கு தள்​ளி​வைத்​தனர்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that
2
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி
3
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணம
4
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் – இஸ்ரே
செய்திகள் · 58 நிமிடங்கள் முன்னர்
7
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாகவே மிகப்பெரிய அலையை ஏற்படுத்
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net