← முகப்பு செய்திகள்

விஜயின் கட்சி தொடர்ந்து முன்னிலையில்: தி.மு.க.வுக்குப் பெரும் பின்னடைவு!

🕐 04 May 2026 📂 செய்திகள் 130 பார்வைகள்
விஜயின் கட்சி தொடர்ந்து முன்னிலையில்: தி.மு.க.வுக்குப் பெரும் பின்னடைவு!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தோ்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கட்சி முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

பல சுற்று வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிலை ஆகியோர் போட்டியிட்ட இடத்தில் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-

த.வெ.க. – 107

அ.தி.மு.க. – 74

தி.மு.க. – 51

நா.த.க. – 00

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net