இந்த வார ராசிபலன் மே 4 முதல் 10 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.
மேஷம்:
மேஷராசி அன்பர்களே!
எந்த விஷயத்திலும் பதற்றமில்லாமல் செயல்படவும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவா ரணம் கிடைத்துவிடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதக மாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதால் உற்சாகமாகக் காணப் படுவீர்கள். நிர்வாகத்தினரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக் கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற் கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: 6,9
அதிர்ஷ்ட எண்கள்: 1,6
சந்திராஷ்டமம் : 4,5 பகல் வரை
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே!
வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாரப் பிற்பகுதியில் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர்கள் மூலம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.
வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக ஆலோசனை கேட்டு வருவார்கள்.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4,9
அதிர்ஷ்ட எண்கள்:2,6
சந்திராஷ்டமம் : 5 பகல் முதல் 6,7 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே!
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாள் களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே பதவிஉயர்வோ அல்லது ஊதியஉயர்வோ கிடைக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர் கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4,6
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
சந்திராஷ்டமம் : 7 இரவு முதல் 8,9,10 காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
கடகம்:
கடகராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற் பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பங்குதாரர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 5,7
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
சந்திராஷ்டமம் : 10 காலை முதல்
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவலர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 5,8
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
கன்னி:
கன்னிராசி அன்பர்களே!
சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாறுதல் கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 7,9
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே.
துலாம்:
துலாராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு, தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கை யாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகளுடன் நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்கும். அதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுசரனையாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 6,10
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமரரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்குப் பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் நன்மையே ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4,7
அதிர்ஷ்ட எண்கள்: 4,9
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
தனுசு:
தனுசுராசி அன்பர்களே!
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. ஆனாலும், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கண வன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று கூடிவரும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 6,9
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே!.
மகரம்:
மகரராசி அன்பர்களே!
பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங் கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம். சக ஊழியர்கள் விமர்சித்தா லும் பொருட்படுத்தவேண்டாம்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 5,7
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன் எனலாமே.
கும்பம்:
கும்பராசி அன்பர்களே!
நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக் காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே இடமாறுதலும் பணிமாறுதலும் கிடைக்கும். பதவிஉயர்வும் சிலருக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூல மாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
அதிர்ஷ்ட நாள்கள்: 7,10
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
மீனம்:
மீனராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் உறவினர்கள் மூலம் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். தேவையான கடனுதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 6,9
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
வழிபடவேண்டிய தெய்வம்: சரஸ்வதி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள் ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ்வெளுத்த
பூவரும் மாதின் அருள்கொண்டு ஞானம் புரிகின்றதே