← முகப்பு செய்திகள்

வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்
வவுனியா மாநகர சபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் சுயேட்சை உறுப்பினர் எஸ்.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபையானது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டிருந்தது. அவ் உயரிய சபையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஆட்சி அமைத்திருந்தன. குறித்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுரால் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்று பல்வேறு முறைகேடுகளும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கையூட்டல்களும் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அரச நிதி முறைகேடும் இடம்பெற்றுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையை அடிப்டையாக கொண்டும் கையூட்டல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மக்களது வரிப்பணத்தை மக்களுக்கே வழங்கும் நோக்கிலும், ஊழல் மோசடியை தடுக்கும் வகையிலும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் முதல்வருக்கு எதிராக என்னால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அரச நிதி முறைகேடு தொடர்பில் குற்றத் தடுப்பு பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து விரைவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு தொடர்பிலும், அவர்களது பதவிகளை வறிதாக்க கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதுடன் மேன் முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சபை நடைவடிகைக்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that
2
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி
3
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணம
4
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் – இஸ்ரே
செய்திகள் · 59 நிமிடங்கள் முன்னர்
7
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாகவே மிகப்பெரிய அலையை ஏற்படுத்
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net