← முகப்பு பதிவு

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 12 பார்வைகள்
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள
தமிழரசு:தீர்மானங்களை கிடப்பில் போடக்கூடாது!

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள தையிட்டி விகாராதிபதியை காப்பாற்ற முற்படும் இலங்கை காவல்துறைக்கெதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

வலிகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை ஆக்கிரமித்து விகாராதிபதியால் அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுமாறு பிரதேச சபை அறிவித்திருந்தது.

இந்நிலையில் விகாராதிபதி பலாலியிலுள்ள இலங்கை காவல்துறையில் முறைப்பாடு செய்ய , காவல்துறையினர் பிரதேச சபை வேலியை அகற்ற கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு தொடர்பான கட்டளை இன்றைய தினம் வழங்கப்படவிருந்த நிலையில் , நீதிமன்று அதனை ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் , பிரதேச சபையின் நடவடிக்கைகளில் இலங்கை காவல்துறை தலையீடு செய்வதாகவும் , பலாலி காவல்துறை பிரிவுடன் தொடர்பு பட்ட விடயத்திற்கு தேவையற்ற விதத்தில் தெல்லிப்பழை காவல்துறையினர் தலையீடு செய்து மன்றில் முன்னிலையாகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகாது , அவர் சார்பில் காவல்துறையினர் முன்னிலையாகின்றனர்.

எனவே பிரதேச சபையை சட்ட நடவடிக்கை எடுக்க விடாது தடுக்கும் காவல்துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சி ஆதரவு சபையானது மற்றைய தீர்மானங்கள் போன்று கிடப்பில் போடாது, அடுத்த சபை அமர்வுக்கு முதல் காவல்துறைக்;கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
10 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
10 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
11 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
13 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்
2
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
3
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர
தமிழ் · 04 Jun 2026
4
மின்வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சி; ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய
5
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்
6
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம்
தமிழ் · 04 Jun 2026
7
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net