← முகப்பு செய்திகள்

வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் சனிக்கிழமை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் சனிக்கிழமை
யாழில் சட்டத்தரணிகள், பொலிஸாருக்கு டிஜிட்டல் சட்டக் கருத்தரங்கு

வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் சனிக்கிழமை (23) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இணையச் சட்டம், எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துதல், சிவில் வழக்குகளில் மின்னணு ஆதாரங்களின் ஏற்புத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்க உரைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரத்ன மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பிரபாகரன் ராமச்சந்திரன், யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளிந்த டில்ருக் ஆகியோர் வளவாளர்களாக இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net