வட்டுக்கோட்டை அராலியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நினைவேந்தலும்
வட்டுக்கோட்டை அராலியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் இன்று (14) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு வட்டுக்கோட்டை அராலி வலி மேற்கு உறுப்பினர் ச.சபேசன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக முள்ளிவாய்கால் உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றப்பட்டடு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
வட்டுகோட்டை அராலி கறுப்பிட்டி பிள்ளயார் ஆலயபகுதி,செம்மணத்தி அராலி துறை ஆகிய இருபகுதிகளில் இந்நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.








