← முகப்பு செய்திகள்

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

🕐 04 May 2026 📂 செய்திகள் 152 பார்வைகள்
வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

45 வயதான குறித்த சந்தேகநபர் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறை அறிவித்துள்ளனர்.

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் ஹைஃபீல்ட் அவென்யூவில் கடந்த புதன்கிழமை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு யூதர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் சோமாலியாவில் பிறந்த பிரித்தானிய குடிமகளான ஈசா சுலைமான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கிரேட் டோவர் தெருவில் குறித்த திகதியில் நடந்த மற்றொரு சம்பவம் தொடர்பாகவும், சுலைமான் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பயங்கரவாதச் சம்பவம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறை தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சுலைமான் என்ற சந்தேகநபரை இன்று பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net