← முகப்பு தமிழ்

வங்கி துறையில் நம்பிக்கை இழப்பு: இது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது – பைசர் முஸ்தபா

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 136 பார்வைகள்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு இணையாகப் பொருளாதாரப் பாதுகாப்பும் முக்கியமானது. என்றாலும் தற்போது அது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அண்மைக் காலத்தில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை மற்றும் வங்கி அமைப்பில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை பாரிய விடயமாகும்.

ஏனெனில் வங்கி அமைப்பும் திறைசேரியும் பாதுகாப்பாக இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டிற்கு ஈர்க்க முடியாது. வங்கிகளைக் கண்காணிப்பதற்காக மத்திய வங்கி மாதத்திற்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை அறவீடு செய்த போதிலும், வங்கித் துறையிலும் பணப் பரிமாற்றங்களிலும் காணப்படும் பாரிய பலவீனங்கள் காரணமாக மக்களிடையே நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. இந்த நிலைமை பயங்கரவாதத்தை விடவும் பாரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது குறித்து ஆராய உடனடியாக விசேட செயலணி ஒன்றை அமைக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினாலும், அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் ஊடாகச் சாதாரண சட்டங்கள் இடைநிறுத்தப்படுவதால் மக்களிடையே தொடர்ச்சியான பயம் நிலவுகிறது. இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க அவசரகாலச் சட்டம் தேவையில்லை. நாட்டின் சாதாரண சட்ட அமைப்பும் அரச இயந்திரமும் சரியாகச் செயற்பட்டால் இவ்வாறான விசேட சட்டங்கள் தேவைப்படாது.

மேலும் உயர்பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளைத் தவறி இருக்கிறார்கள். ஜப்பானில் ஒரு ரயில் ஒரு நிமிடம் தாமதமானாலும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் ஊழல்வாதிகளாக இல்லாவிட்டாலும், தமது பொறுப்பிலுள்ள நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கடந்தகால அரசாங்கங்கள் செய்த தவறுகள் அல்லது 75 ஆண்டுகால சாபம் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அந்தத் தவறுகளைத் திருத்தி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால், கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் பொறுப்பைச் சரியாக ஏற்று நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net