← முகப்பு செய்திகள்

யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 42 பார்வைகள்
யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய மலசலகூட விவகாரம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்குச் செல்லும் மாநகரசபை!

யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது.
14ம் திகதி அன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் குறித்த விடையம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி விடையத்தை முன்வைத்து சட்ட ரீதியான ஆலோசனைக்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இன்நிலையில் மக்களின் நலன் சார் விடையமாக இவ்விடையம் இருப்பதால் இதில் இரு தரப்பையும் ஒரு சமரசத்துக்கு இணங்கச் செய்து தீர்வை காண வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி உறுப்பினரும். முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி வலியுறுத்தியதுடன் சட்டரீதியான நடவடிக்கை குறித்த திட்டத்தின் நோக்கத்தை பாதித்து காலத்தை வீணடிக்கச் செய்யும் என்றும் கூறியதுடன் அவ்வாறு சட்ட ரீதியான ஆலோசனை பெறும் பட்சத்தில் அவ் ஆலோசனை சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேனேரம் குறித்த விடையம் சட்ட ஆலோசனை அல்லாது நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார்.

ஆனாலும் சட்ட ஆலோசனைபெற்று அடுத்த நடவடிக்க்சிக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net