← முகப்பு செய்திகள்

யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி இன்று (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் மத்தி,

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 8 பார்வைகள்
யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி இன்று (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் மத்தி,
யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி இன்று (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் இன்று வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net