← முகப்பு செய்திகள்

மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு

🕐 05 May 2026 📂 செய்திகள் 76 பார்வைகள்
மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு
மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு

மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று வாக்குபதிவின் போது சில இடங்களில் மோதலும் வெடித்துள்ளது. சப்ரா, சந்திப்பூர் மற்றும் பாநகர் ஆகிய இடங்களில் வன்முறை, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹத்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக ஏஜெண்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதியம் 1 மணியளவில் 61.11 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. மதியம் 3 மணியளவில் 78.68 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருந்தது. மாலை 5 மணியளவில் 89.99 சதவிகிதம் வாக்கு பதிவான நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாக சாதனை படைந்திருந்தது.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
4 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 18 நிமிடங்கள் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 19 நிமிடங்கள் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 32 நிமிடங்கள் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 44 நிமிடங்கள் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 51 நிமிடங்கள் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net